சமீபத்திய செய்தி

தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம்

வணிக மற்றும் வீட்டுமனை திட்டங்களில் வாங்குபவர் மற்றும் திட்ட மேம்பாட்டாளர்க்கிடையில் நடைபெறும் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தி கட்டிடமனை விற்பனைத் தொழிலை ஒழுங்குபடுத்தி மேம்பாடுசெய்ய "கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) சட்டம் 2016" வழிவகை செய்கிறது. கட்டிட மனைத் தொழிலை கண்காணிக்கவும், கட்டிட மனை திட்டங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிக்கவும் மாநில அளவில் கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் அமைத்திட இச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் வீடு, மனை வாங்குவோரின் நலனைப் பாதுகாத்து கட்டிட மனை தொழில் மூலதனத்திற்கு உதவதாகும்.

கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் - ஓர் கண்ணோட்டம்

மத்திய அரசு "கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) சட்டம் 2016"- னை வெளியிட்டுள்ளது. இச்சட்டம் கட்டிட, மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தினை உருவாக்கி வீட்டுமனை திட்டங்களில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்கும் இச்சட்டத்தின் கீழ் விதிகளை உருவாக்குவதற்கும் வழிவகை செய்கின்றது. தமிழக அரசு, கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) சட்டத்தின் விதிகளை முன்னெடுக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.112, நாள் 22.06.2017 மூலம் தமிழ்நாடு கட்டிட, மனை விற்பனை (முறைப்படுத்தலும் மற்றும் மேம்படுத்தலும்) விதி 2017-க்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கட்டிட, மனை விற்பனையாளர்களும், முகவர்களும் ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்யாமல் எந்த ஒரு கட்டிட மனை திட்டத்தினையும் விற்பனை செய்ய இயலாது. பல கட்டங்களாக நடைபெற்று கொண்டிருக்கும் அல்லது நடைபெறவுள்ள திட்டங்கள் நிலப்பரப்பில் 500 ச.மீட்டருக்கு மேல் அல்லது குடியிருப்புகள் 8 அலகுகளுக்குமேல் இருப்பின் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. குழுமத்தில் பதிவு செய்த விவரங்கள், முன்பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு கட்டிடம் அல்லது மனை, பெறப்பட்ட பல்வேறு ஒப்புதல்கள் உள்ளடங்கிய அனைத்து விபரங்களையும், கட்டிட மனை விற்பனையாளர்கள் பொதுமக்கள் பார்வைக்காக குழுமத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். கட்டிட மனை விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர் இருவருமே காலதாமதத்திற்கு சமமான வட்டியினை அளிக்கவேண்டும். இதே போன்று சொத்து விற்பனையாளர்கள், தரகர்கள், இடைத்தரகர்கள் என எந்தவொரு பெயரில் தொழில் செய்வோரும் தமிழ்நாடு கட்டிட மனை ஒழுங்குமுறை குழுமத்தில் முகவராகப் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்ய தவறுவது ஒரு குற்றமாகும். தவறுபவர்கள் மீது அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

குழுமத்தின் அலுவலகம் முதல்தளம், 1-ஏ, காந்தி-இர்வின் பாலம் சாலை, எழும்பூர், சென்னை - 600008 எனும் முகவரியில் இயங்கிவருகின்றது.

Search

2020 All Rights Reserved.